Published : 08 Apr 2020 07:59 PM
Last Updated : 08 Apr 2020 07:59 PM
கோவிட்-19 காய்ச்சலுக்கு எதிராக பாதுகாப்பு உபகரணத்தின் நேனோ கோட்டிங்கைக் கண்டுபிடிக்கும் ஆய்வுக்காக ரூ.30 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு இதை அறிவித்துள்ளது. ஆய்வுக்கான திட்டத்தைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி கடைசி நாளாகும்.
கோவிட்-19 வைரஸைத் தடுக்கும் மூன்றடுக்கு மருத்துவ மாஸ்க்கைத் தயாரிக்க உதவும் நேனோ கோட்டிங் மற்றும் என்95 (N-95) சுவாசக் கருவி அல்லது முகக் கவசங்கள் இந்தச் செயல்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். பிபிஇ எனப்படும் தனிமனிதப் பாதுகாப்பு உபகரணங்களின் அனைத்துப் பொருட்களும் அடுத்தகட்ட அம்சங்கள்.
இந்தச் செயல்திட்டத்துக்கான கால அளவு அதிகபட்சமாக ஒரு ஆண்டு. பிபிஇ உபகரணங்களுக்கான நேனோ பொருட்களைத் தயாரிப்பதற்கான மானியமாக ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வழங்கப்படும். தொழிற்சாலை அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து இதை மேற்கொள்ளலாம்.
இதற்கான திட்ட முன்வடிவை SERB தளம் வழியாக 'serbonline.in என்ற இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கலாம். அவை அனைத்தும் பல்கலைக்கழகம் வாயிலாகப் பரிசீலிக்கப்படும். இதில் உருவாக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் சர்வதேச அல்லது பிஎஸ்ஐ தர நிலைக்கு ஈடாக இருக்கவேண்டும். இதனை அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT