Published : 04 Apr 2020 11:49 AM
Last Updated : 04 Apr 2020 11:49 AM

மாணவர்களுக்கு ஆரோக்கிய சேது செயலி: மத்திய அரசு பரிந்துரை

கோவிட்-19 அச்சுறுத்தலை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாணவர்களை ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து துறைச் செயலர் அமித் கரே அனைத்துக் கல்வி நிறுவனக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''யுஜிசி, என்சிடிஇ, என்ஐஓஎஸ், என்சிஆர்டி, கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆகிய கல்வி நிறுவனங்கள் கரோனாவுக்கு எதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய சேது செயலி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

கோவிட்-19 காய்ச்சலுக்கு எதிராக அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று மக்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து இந்தச் செயல் தகவல்களை அளிக்கும். செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் அதைக் கணக்கிட முடியும். ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் இதைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் துறை வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, பிரதமரின் வேண்டுகோள் படி, மாணவர்கள் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகளை ஏற்றலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது, பால்கனியில் ஒன்றுகூடக் கூடாது'' என்று அமித் கரே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x