Published : 01 Apr 2020 04:35 PM
Last Updated : 01 Apr 2020 04:35 PM

ஆசிரியர்களுக்கு 14 நாட்கள் இலவச ஆன்லைன் பயிற்சி: அனுபவமிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முன்னெடுப்பு

கரோனா ஊரடங்கை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு 14 நாட்கள் ஆன்லைன் பயிற்சியை வழங்க அனுபவமிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் முன்வந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பெரும்பாலான உலக நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைன் பயிற்சிகள் ஆங்காங்கே ஆசிரியர் குழுக்களாலேயே வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு டிஜிட்டல் டீம் சார்பாக ஆசிரியர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் இணையவழிக் கற்றல் பயன்பாடு குறித்த ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் நீங்கள் வீட்டில் இருந்தே பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இதில் பதிவு செய்பவர்களுக்கு தினந்தோறும் மாலை ஒரு மணி நேரம் இலவசமாகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. வீடியோ மூலம் இணையத்திலேயே கற்பித்தல் நடைபெறும். பயிற்சி பெறுவோர் கேட்க விரும்பும் சந்தேகங்களையும் உடனுக்குடன் கேட்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மொபைல் போன் மூலம் கீழ்க்கண்ட செயலிக்கான இணைப்பை க்ளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings

இந்த மொபைல் செயலி மூலமே பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் தினந்தோறும் மாலை 4.30 முதல் 5.30 மணி வரை இந்தப் பயிற்சி நடைபெறும்.

தினந்தோறும் புதுப்புதுத் தலைப்புகளில், சிறந்த அனுபவம் மிக்க கருத்தாளர்களால் ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

முதல் நாள் பயிற்சியை தேசிய விருதாளரும் அன்பாசிரியருமான கருணைதாஸ் (பட்டதாரி ஆசிரியர், விருதுநகர் மாவட்டம்) கருத்தாளராக இருந்து தொடங்கி வைக்கிறார்.

தலைப்பு
How to create E-content Video in Power point?

02.04.2020 (வியாழக்கிழமை) அன்று Cyber security and safety என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேசிய விருது பெற்ற பட்டதாரி ஆசிரியர் விஜயகுமார் பயிற்சி அளிக்க உள்ளார்.

அடுத்த நாள் 03.04.2020 (வெள்ளிக்கிழமை) அன்று அன்பாசிரியரும் தேசிய விருது பெற்றவருமான திலீப் பயிற்சி அளிக்கிறார். அதேபோல மீதமுள்ள 11 நாட்களுக்கும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கின்றனர்.

கூடுதல் தகவல்களுக்கு: கருணைதாஸ்- 9655816364

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x