Published : 30 Mar 2020 11:13 AM
Last Updated : 30 Mar 2020 11:13 AM
கரோனா தொடர்பான முழுமையான தகவல்களைத் திரட்டியும் புதிதாக உருவாக்கியும், மத்திய அரசு தொடராக வெளியிட உள்ளது.
கரோனா வைரஸின் பிடியிலிருந்து நாட்டையும், மக்களையும் காக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் கரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000-ஐத் தாண்டியுள்ளது.
இந்த சூழலில் கரோனா வைரஸ் தொடர்பான வதந்திகள் சமூக வலைதளத்தில் பெருகி வருகின்றன. இதை உணர்ந்த மத்திய அரசு, கரோனா தொடர்பாக சமூக, உளவியல், பொருளாதார, கலாச்சார முக்கியத்துவம் குறித்த தகவல்களைத் தொடராக வெளியிட உள்ளது.
மத்திய மனித வளத்துறை அமைச்சகம், தேசிய புத்தக அறக்கட்டளை (NBT) வாயிலாக இதை மேற்கொள்கிறது.
இது தொடர்பாக நேஷனல் புக் டிரஸ்ட் தலைவர் பேராசிரியர் கோவிந்த் பிரசாத் சர்மா கூறும்போது, ''நாடு முழுவதும் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், கரோனா தொடர்பான புதிய படிப்பு உள்ளடக்கங்களை அறிமுகப்படுத்துவது எங்களின் கடமை.
அனைத்து வயதினரும் படிக்கும் வகையில் 'Corona Studies Series' என்ற பெயரில் தொடர் வெளியாக உள்ளது. அச்சு, மின்னணு என இரண்டு வகையிலும் இவை வெளியாகும்.
வெவ்வேறு இந்திய மொழிகளில், இவை வெளியாக உள்ளது. முதற்கட்டமாக அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய உளவியலாளர்கள் மூலம் 'கரோனா பெருந்தொற்றால் சமூகத்தில் ஏற்படும் உளவியல் பாதிப்புகளும் அதிலிருந்து மீள்வதும்' என்ற தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT