Published : 19 Mar 2020 11:51 AM
Last Updated : 19 Mar 2020 11:51 AM
இந்தியா முழுவதும் பல்வேறு பள்ளிகளில் சர்வதேச பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் CISCE நடத்தும் ICSE, ISC தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ICSE மற்றும் ISC பாடத் திட்டத்துக்கான 10 மற்றும்12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைவதாக இருந்தன. இந்நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுளன.
இதுதொடர்பாக CISCE வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் 19 காய்ச்சலை அடுத்து, இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் தேர்வுகளைத் தள்ளி வைக்க முடிவெடுத்துள்ளது.
இதனால் மார்ச் 19 முதல் மார்ச் 31 வரை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ICSE மற்றும் ISC பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. பொது சுகாதாரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று CISCE செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகி ஜெர்ரி ஆரதோன், திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மற்றும் வெளிநாட்டு மையங்களில் நடைபெற்று வந்த சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT