நடப்புகள்
ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு
தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனினும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும். பல்கலைக்கழக தேர்வுகள், செய்முறை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இத் தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் இயங்கும் என உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார். இதேபோல் பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.
