பால்காரரைக் கொண்டு மாணவர்களுக்கு கொள்ளவு பாடம்: பத்தலப்பல்லி அரசுத் தொடக்கப்பள்ளி அசத்தல்

பால்காரரைக் கொண்டு மாணவர்களுக்கு கொள்ளவு பாடம்: பத்தலப்பல்லி அரசுத் தொடக்கப்பள்ளி அசத்தல்
Updated on
1 min read

பால்காரரைக் கொண்டு பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கொள்ளளவை கணக்கீடு செய்யப்பட்டது.

அரசுப் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கொள்ளளவை அளத்தல் என்னும் கணித பாடம் உள்ளது. அதில், கொள்ளளவை அளக்க பொதுவான பாத்திரம் தேவை. அம்மா வீட்டில் பாலை எவ்வாறு அளக்கிறார் அல்லது எவ்வாறு வாங்குகிறார்? என்பது கணித பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை மிக எளிமையாக இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு புரியவைக்க, அருகிலுள்ள பால்காரர் மூலம் பாடம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அவரும் மாணவர்களுக்காக விரும்பி வகுப்பறைக்கே நேரில் வந்தார்.

வரும்போது இரண்டு கேன்கள் நிறைய பாலும் கொள்ளளவைகளை அளக்க 100 மி.லி., 200 மி.லி., 500 மி.லி., 1 லிட்டர் என்ற அளக்கும் அளவீட்டு கருவிகளோடும் வந்தார். அதைக் கொண்டு மாணவர்களுக்கு பால் கொள்ளளவு அளந்து காட்டப்பட்டது.

பின்னர் 1000 மில்லி லிட்டருக்கு எத்தனை 100 மில்லி லிட்டர் பால் ஊற்ற வேண்டும்? எத்தனை 200 மில்லி லிட்டர் ஊற்றினால் 1000 மில்லி லிட்டர்/1.லிட்டர் பால் கிடைக்கும் என்று கொள்ளளவு குறித்து கற்பிக்கப்பட்டது. மாணவர்களுக்காக நேரில் வந்து நேரத்தைச் செலவிட்ட பால்காரருக்கு தலைமை ஆசிரியர் பொன்.வள்ளுவன் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in