Published : 13 Mar 2020 11:03 AM
Last Updated : 13 Mar 2020 11:03 AM
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட்டில் உள்ள குளறுபடியால் மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்.13-ம் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப் பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்ற வரிசையில் நடத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு மொழிப் பாடம், ஆங்கிலம், சமூக அறிவி யல், அறிவியல், கணிதம் எனப் பாடங்களின் வரிசையை மாற்றி அரசு தேர்வுத் துறை அறிவித் துள்ளது. இரண்டு வாரங்களில் தேர்வு தொடங்க உள்ளது.
மாணவர்கள் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். அதில் தேர்வு நடைபெறும் தேதிகளின் வரிசையை மாற்றிமாற்றி கொடுத்துள்ளனர். அதாவது மார்ச் 27-ம் தேதி மொழிப்பாடம், மார்ச் 31-ம் தேதி ஆங்கிலம், ஏப்.13-ம் தேதி கணிதம், ஏப்.7-ம் தேதி அறிவியல், ஏப்.3-ம் தேதி சமூக அறிவியல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் சேதுசெல்வம் கூறுகையில், பாடங்களின் வரிசையை மாற்றி தேர்வு அட்டவணை வெளியிட்டபோதே குழப்பம் ஏற்படும் எனத் தெரிவித்தோம். தற்போது தேதிகளையும் மாற்றிக் கொடுத்து தேவையில்லாத குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இத னால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் கண்டிப்பாக குழப் பம் ஏற்படும். இதைத் தவிர்க்க தேதி வரிசை அடிப்படையில் ஹால் டிக்கெட்டை மாற்றி வெளி யிட வேண்டும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT