Published : 11 Mar 2020 02:16 PM
Last Updated : 11 Mar 2020 02:16 PM

2, 3-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வங்கிப் பயிற்சி: உ.பி.யில் ஆரம்பம்

உத்தரப் பிரதேச அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் திறன் வளர்ப்பாக வங்கிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக லக்னோவைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் 2 மற்றும் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வங்கி தொடர்பான திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கென சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் நோட்டுகள் வரை கையாள இதில் கற்பிக்கப்படுகிறது. பிரதம் கல்வி அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம், மாணவர்களுக்கு இந்தப் பயிற்சியை வழங்கி வருகிறது.

வங்கி பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வது எப்படி, காசாளரின் பணிகள், ரெக்கார்டுகளைப் பராமரிப்பது, எப்படி வாடிக்கையாளர்களைக் கையாள்வது என்பது குறித்துப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதேபோல வங்கிப் பாதுகாப்பாளராக இருப்பது குறித்தும் வங்கிக் கணக்குகளை உருவாக்குவது பற்றியும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.

இது தொடர்பாக தன்னார்வ நிறுவனத்தின் மாநிலத் தலைவர் நுஸாத் மாலிக் கூறும்போது, ''நேரடி வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை மாணவர்கள் கற்றுணர வேண்டியது அவசியம். இந்தப் பயிற்சிகள் மூலம் மாணவர்களின் விவாதத் திறன்கள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட கற்றல் ஆகியவை வளர்கின்றன'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x