Published : 10 Mar 2020 06:52 PM
Last Updated : 10 Mar 2020 06:52 PM
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாநிலம் முழுவதும் கடந்த 2-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை சுமார் 8.35 லட்சம் மாணவர்கள் எழுதி வருகின்றனர். அதேபோல 11-ம் வகுப்புத் தேர்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படுகின்றன. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26-ம் தேதி முடிகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 2019-20-ம் கல்வி ஆண்டில் ஏப்ரல் 20-ம் தேதி வரை செயல்பட்டு பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன. இதையடுத்து, வரும் 21-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளும் அடுத்த மாதம் தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதனால் ஏப்.20-ம் தேதிக்கு மறுநாள், ஏப்ரல் 21-ல் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT