Published : 10 Mar 2020 11:07 AM
Last Updated : 10 Mar 2020 11:07 AM
உலகின் முன்னணி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்து ஆய்வுபடிப்புகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை ஐஐடி பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.
இந்தஒப்பந்தம் குறித்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்கு ஆசியத் தலைவர் கிஷோர் ஜெயராமன் கூறியதாவது, “மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் பாடப் புத்தகங்களில் உள்ளவற்றை படித்துவந்தனர். அதன் அடிப்படையில் தங்களுடைய பணியில் அவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால், தற்போது பயன்பாட்டு அடிப்படையில் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கேற்ற வகையில் ஆய்வு படிப்புகளைக் கட்டமைக்க வேண்டும்.
இதற்காக சென்னை ஐஐடி-யுடன் இணைந்து ஆய்வு படிப்புகளைக் கட்டமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்தப் படிப்புகளுக்கு முதுநிலை மற்றும் முனைவர் படிப்புமாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பும் நிறுவனத்தின் சார்பில்உறுதி செய்துதரப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT