Published : 03 Mar 2020 08:34 AM
Last Updated : 03 Mar 2020 08:34 AM

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகள் விவரம் கணக்கெடுப்பு

சென்னை

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் செயல்படும் தனியார் நர்சரி, பிரைமரி, மற்றும்மழலையர் பள்ளிகள் தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின் அங்கீகாரம் பெறுவது கட்டாயம்.

தமிழகம் முழுவதும் 3000 பள்ளிகள்

ஆனால், தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருவதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. அவற்றில் பல பள்ளிகள் போதுமான கட்டிட வசதிகூட இல்லாமல் இயங்குவதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி மாவட்ட வாரியாக தற்போது தொடங்கியுள்ளது. வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளின் அங்கீகார சான்றிதழை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெறும் இப்பணிகள் முடிந்தபின்னர் அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியல், தொடக்கக்கல்வி இயக்குநரகத்திடம் அளிக்கப்படும். அதிலுள்ள பள்ளிகளை, ஏப்ரல் முதல் நிரந்தரமாக மூடவும், அதன் நிர்வாகிகள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x