Published : 28 Feb 2020 08:50 AM
Last Updated : 28 Feb 2020 08:50 AM
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் சென்னை கிண்டியில் மார்ச் 5-ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பார்மசி, நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்பு படித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வி.விஷ்ணு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள மாநிலதொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் 5-ம் தேதி (வியாழக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட துணை மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் துணை மருத்துவ படிப்புகள் (நர்சிங்,பார்மசி, லேப் டெக்னீசியன், ரேடியாலஜி, உயிரி வேதியியல், நுண்ணுயிரியல் போன்றவை) படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். முகாமுக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், மற்றும் சுயவிவர குறிப்பு கொண்டுவர வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய 044-22500134 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT