Published : 05 Dec 2019 08:50 AM
Last Updated : 05 Dec 2019 08:50 AM
ஜம்மு- காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டு, யூனியன் பிரதேசங்களாக செயல்பட்டு வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு மொத்தம் 2,367 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், மின்சாரஉற்பத்தி 1,959 மெகாவாட் மட்டுமே உள்ளது.
இதனால், சுமார் 408 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. காஷ்மீர் பகுதிகளில் 1,328 மெகாவாட் தேவைப்படும் நிலையில், 1,140 மெகாவாட் மின்சாரம்தான் உள்ளது.
ஜம்மு- காஷ்மீருக்கு உட்பட்ட பகுதிகளில் 1,490 மெகாவாட் தேவைப்படும் நிலையில் 1,024 மெகாவாட்டே கையிருப்பு உள்ளது.
ஜம்மு- காஷ்மீர், லடாக் பகுதியில் கடுமையான பனிப்பொழிவுஇருப்பதால், ஹீட்டர் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால்தான், மின்சார தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
நீதிபதி நியமனங்களில் மத்திய அரசு பங்கு வகிக்கும்: மத்திய அமைச்சர் அறிவிப்பு
புதுடெல்லி
நீதிபதிகள் நியமனத்தில் இனி மத்திய அரசு பங்கு வகிக்கும் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதிலளிக்கையில், “உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நீதிபதி நியமனம் குறித்து கொலிஜியம் குழு பரிந்துரை செய்யும் நபர்களை மத்திய அரசு நீதிபதியாக நியமனம் செய்து வருகிறது.
இனி இதுபோன்ற தபால்காரர் வேலையை மத்திய அரசு செய்யாது. நீதிபதி நியமனத்தில் இனி மத்திய அரசு பங்கு வகிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT