Published : 26 Nov 2024 06:21 AM
Last Updated : 26 Nov 2024 06:21 AM
விளைச்சலுக்காக நிலத்தை தயார் செய்வது.
மனைவியின் தம்பி, மனைவியின் அண்ணா, அக்காவின் கணவர், தங்கையின் கணவர், மைத்துனியின் கணவர் - இவர்களில் யார் brother-in-law? மீதிப் பேரை எப்படி அழைப்பது? - மனைவியின் சகோதரர், சகோதரியின் கணவர் ஆகியோரை brother-in-law என்று குறிப்பிட வேண்டும். மைத்துனியின் கணவரை co-brother என்பது வழக்கம். தெளிவாக உறவுகளைக் குறிக்கத் தமிழ்தான் ஏற்றது. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை அனைவரும் siblings. ஆங்கிலத்தில் சித்தப்பாவும் uncle. மாமாவும் uncleதான். முன்னே பின்னே தெரியாத நடுத்தர வயதுக்காரரும் uncleதான்!
Aunt (அல்லது ஆன்ட்டி) என்று நாம் விளிப்பவர் நமக்கு சித்தியாகவும் இருக்கலாம், அத்தையாகவும் இருக்கலாம், அக்கம் பக்கத்து வீடுகளில் வசிக்கும் நடுத்தர வயதுப் பெண்மணியாகவும் இருக்கலாம்! பெரியப்பா மகன், சித்தப்பா மகன் எல்லோருமே cousins. சகோதரன் மகன், சகோதரி மகன் nephews. பெரியப்பா மகள், சித்தப்பா மகள் ஆகியோரும் cousinsதான். சகோதரன் மகள், சகோதரி மகள் nieces.
Juvenile என்று சொல்லுக்கு என்ன பொருள்? - மிக இளம் வயதினருக்கான, பதின்ம வயதில் இருப்பவர்களுக்கான, என்று வைத்துக்கொள்ளலாம். அதாவது குழந்தைப் பருவத்தைத் தாண்டிய ஆனால் முழுமையான adult என்று கருத முடியாதவர். Juvenile crime என்றால் மிக இளம் வயதினர் புரிந்த குற்றம். Juvenile prison என்றால் மிக இளம் வயதினருக்கான சிறைச்சாலை
எப்போதும் எதற்காகவாவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவரை pessimist எனலாமா? - Pessimist என்பவர் அவநம்பிக்கை வாதி. எதுவும் நல்லபடியாக நடக்காது என்று எண்ணுபவர். எதையும் தன்னால் சரியாகச் செய்ய முடியாது என்று கருதுபவர்.
எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவரை Brooder எனலாம்.
சோதனை மேல் சோதனை வந்தாலும் நம்பிக்கையோடு இருப்பவரை Eternal optimist என்று விவரிக்கலாம்.
Shoo என்பது மௌனமாக இரு என்ற எச்சரிக்கையா? - அதாவது தமிழில் ‘உஷ்’ என்பதைப் போலவா என்கிறீர்கள். இல்லை. ஏதோ ஒருவித ஒலியை ஒலிப்பதன் மூலம் ஒன்றை விரட்டுவதைத்தான் shoo என்ற சொல் குறிக்கிறது. அருகில் உட்கார்ந்திருக்கும் காக்கையை shoo செய்து விரட்டலாம். அதைவிட அருகாமையில் வந்து கொண்டிருக்கும் தூக்கத்தை shoo செய்து விரட்ட முடியுமா என்ன?
அரிவாளால் குத்தப்படுவதை stabbing எனலாமா? - Stab என்றால் குத்துவது. கத்தியால் குத்தப்படுவதைத்தான் stab என்பார்கள். அரிவாளால் சீவுவதை அல்ல. அரிவாளுக்கான ஆங்கிலப் பெயர் sickle. We cut with a sickle.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT