Last Updated : 15 Oct, 2024 06:14 AM

 

Published : 15 Oct 2024 06:14 AM
Last Updated : 15 Oct 2024 06:14 AM

Posterity என்ற சொல் எதைக் குறிக்கிறது? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 101

வருங்காலத்தையும், அப்போது வசிக்கக்கூடிய மக்களையும் அந்தச் சொல் குறிக்கிறது. அதாவது பின் வரும் தலைமுறைகள் என்று கூறலாம். We should look after our environment for the sake of posterity.

Post என்பதை முன்னொட்டாகக் கொண்ட சொற்களில் அது ‘பிறகு’ என்பதைக் குறிக்கிறது.​Post retirement plans என்றால் ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது என்பது குறித்த திட்டங்கள். Postgraduate என்றால் பட்டப்படிப்புக்குப் பிறகு பெறும் பட்டம். Postponement என்றால் செய்ய வேண்டியதை தள்ளிப் போடுதல். இப்போது ​postproduction, postmillennial, postcolonial ஆகிய சொற்கள் எவற்றைக் குறிக்கின்றன என்பதை உங்களால் யூகிக்க முடியும்.

My house is in sixes and sevens என்று ஓர் ஆங்கில திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் கூறியது. இதற்கு என்ன பொருள்? - உங்கள் வீட்டில் பொருட்கள் இறைந்து கிடக்கின்றன, ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றால் நீங்கள் கூட இப்படிக் கூறலாம். ஏதாவது ஒரு எண்ணை உள்ளடக்கிய வேறு சில பேச்சு வழக்குகள் உள்ளன. அவற்றின் அர்த்தங்களையும் தெரிந்து கொள்வோமே.

Million-dollar question என்பது முக்கியமான கேள்வியைக் குறிக்கிறது. ஒரு பொருளைப் பற்றிக் குறிப்பிடும்போது a dime a dozen என்றால் அது அதிக அளவிலும் மலிவான விலையிலும் கிடைக்கிறது என்று அர்த்தம். ஒருவர் எப்போதும் தன் காரியங்களை at the eleventh hourதான் செய்வார் என்றால் அவருக்கு எதையும் கடைசி நிமிடத்தில் செய்துதான் பழக்கம் என்று பொருள். Catch 22 என்று ஒரு வினோதமான சூழலைக் குறிப்பிடுவார்கள். இதே பெயர் கொண்ட ஒரு நாவலில் இதற்குப் பொருத்தமான கதையோட்டம் உள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் நடைபெறுவதாக இந்தக் கதை அமைந்துள்ளது. எதிரி விமானங்களை அணு குண்டு வைத்துத் தகர்ப்பதில் வல்லவன் கதாநாயகன். ஆபத்தான இந்தப் பணியிலிருந்து விலக வேண்டும் என்பது அவனது எண்ணம். ஆனால், மனநிலை சரியில்லாதவர்களுக்கு மட்டுமே இந்தப் பணியிலிருந்து விலக்கு அளிப்பார்கள். தானாக முன்வந்து ஒருவன் உயிருக்கே ஆபத்தான போர் சூழல்களை எதிர்கொண்டால் அவன் மனநலம் குன்றியவனாகக் கருதப்படுவான்.

அவன் இந்த ​சூழலில் பணியிலிருந்து விடுபடக்கோரினால் விடுவிக்கலாம். ஆனால், அதேசமயம் தன்னை அந்தப் பணியிலிருந்து விடுவிக்குமாறு ஒருவன் கேட்டுக் கொண்டால் அவன் ஆபத்தை உணரும் தன்​மை கொண்டிருப்பதால் மனநலம் உள்ளவனாகக் கருதப்பட்டு போர் பணியிலிருந்து விடுவிப்பதற்கான தகுதியை இழந்து விடுகிறான்!

நடைமுறை வாழ்க்கையில் catch 22 ​சூழல்களுக்கான இரண்டு எடுத்துக்காட்டுகள் இதோ: வெற்றி பெற்றால்தான் பிறரது ஆதரவு கிடைக்கும். அதேசமயம் பிறரது ஆதரவு கிடைத்தால்தான் வெற்றிபெற முடியும். பணி அனுபவம் இருந்தால்தான் வேலை கிடைக்கும். ஆனால், அப்படிப்பட்ட அனுபவத்தைப் பெற வேலை கிடைத்தாக வேண்டும்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ நூலாசிரியர். தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x