Last Updated : 27 Aug, 2024 06:20 AM

 

Published : 27 Aug 2024 06:20 AM
Last Updated : 27 Aug 2024 06:20 AM

ஆங்கிலம் அறிவோமே 4.0: 94 - நினைவுப்பரிசுக்கு வேறொரு சொல் உள்ளதா?

Very clever என்பதற்கான இணை சொல்லாக genius என்பதைக் குறிப்பிட்டிருந்தீர்கள். Genius என்பது noun. Very என்று தொடங்கும் பிற சொற்களுக்கு நீங்கள் adjectivesஐ இணையான சொல்லாக குறிப்பிட்டிருக்கும்போது, இதற்கும் ஒரு adjective சமச்சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாமே?

Genius என்பதை adjective ஆகவும் பயன்படுத்தலாம். Remember how genius Ramanujam was in mathematics. I think her violin playing is genius.

He paused for a while என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ​Passed என்பதை paused என்று தவறாக எழுதி இருக்கிறார்களோ? - இல்லை. சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளது. Start, Stop என்பதைப் போல Pause என்றும் ஒரு பொத்தானை நீங்கள் டிவி ரிமோட்டில் பார்த்திருக்கலாம். Pause என்பது ஒரு சிறு இடைவேளையை, அல்லது தயக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும். He paused for a while என்றால் அவன் தன் பேச்சை தொடர்வதற்கு ஒரு சிறு இடைவேளை எடுத்துக் கொண்டான் (அல்லது பேச்சைத் தொடர்வதில் அவனுக்கு சிறிது நேரத்துக்கு தயக்கம் இருந்தது) என்று பொருள்.

ஆசைகாட்டி மோசம் செய்வதை ஆங்கிலத்தில் ஒரே சொல்லில் எப்படி விவரிக்கலாம்? - Betrayal அல்லது treachery. சோதனை மேல் சோதனை வந்தாலும் நம்பிக்கையோடு இருப்பவரை எப்படி விவரிக்கலாம்? Eternal optimist

Hymn என்பது பிரார்த்தனையா?
துதிப் பாடல்.
Commuter என்பவர் யார்?
பணி இடத்துக்கு தினமும் நீண்டதூரம் பயணம் செய்பவர்.
Contender என்பவர் சாம்பியனா?
போட்டியிடுபவர்.
Execution என்பது செயல்படுத்
தலா?
ஒரு குறிப்பிட்ட திட்டத்தை செய்து முடித்தல்.
நினைவுப்பரிசு என்பதைக் குறிக்
கும் memento என்ற சொல்லுக்கான
ஒரு சம வார்த்தையை சொல்
லுங்கள்.
Keepsake. (பலரும் momento என்று தவறாக எழுதுகிறார்கள்).
Spendthrift?
ஊதாரி.
மேடையில் பேசும்போது சிலர்
தடுமாறுகிறார்கள் அல்லது பதற்றத்
தில் உளறிக் கொட்டுகிறார்கள். இதை எந்த ஆங்கிலச் சொல்லால் விவரிக்கலாம்?
Fumbled
Chorus? Chores?
Chorus - சேர்ந்திசை. Chores - சலிப்பூட்டும் பணி.
Every cloud has a silver lining
என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம்?
‘இரவானால் பகல் ஒன்று வந்தி
டுமே’ (எந்த சோகத்துக்கும் ஒரு விடிவு உண்டு).
Cultivate என்பது விதைப்பதா? அறுவடை செய்வதா?
விளைச்சலுக்காக நிலத்தை தயார் செய்வது.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x