Last Updated : 20 Aug, 2024 06:41 AM

 

Published : 20 Aug 2024 06:41 AM
Last Updated : 20 Aug 2024 06:41 AM

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 93: Nuclear umbrella என்பது என்ன?

That is the spirit என்றால்? - ஒருவரது நேர்மறை எண்ணப்போக்கை ஊக்குவிக்கும் வாக்கியம் இது. ‘இன்னும் அதிகமாக முயற்சிசெய்து அதிக மதிப்பெண் பெறுவேன்’ என்று ஒரு மாணவன் கூறும்போது That is the spirit என்று கூறலாம். ‘அந்த மொழியை என்னால் பத்து நாட்களில் கற்றுக் கொள்ள முடியும்’ என்று ஒருவர் கூறும்போது That is the spirit என்று கூறினால் அது ஊக்குவிப்பதாகும்.

Interpol என்ற சொல்லின் பொருள் என்ன? - அது International Police Organisation என்பதன் சுருக்கம். பல நாடுகள் இதன் உறுப்பினர்கள். உலக அளவில் நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக இந்த அமைப்பு செயல்படுகிறது.

இதயத்தில் பொருத்தப்படும் pacemaker என்பதற்கு ஏன் அந்தப் பெயர்? - Pace என்பது வேகத்தை குறிக்கும். I cannot keep pace with you என்றால் உங்கள் வேகத்துக்கு ஈடுகொடுத்து என்னால் நடக்கவோ ஓடவோ செயல்படவோ முடியாது என்று பொருள். இதயத் துடிப்பு சீராக இல்லாதபோது ஒருவரது மார்புப் பகுதியில் (இதயத்தில் அல்ல) ஒரு சிறு கருவியைப் பொருத்தி இதயத்துடிப்பு சீராக இருக்கும்படி செய்வார்கள். அந்த கருவியைத்தான் pacemaker என்கிறோம்.

Detonate என்பது ஒரு குண்டை வெடிக்கச் செய்வதா அல்லது செயலிழக்கச் செய்வதா? - Detonate என்பது ஒரு வெடியை அல்லது குண்டை வெடிக்கச் செய்வது. Use this remote to detonate the bomb. The device detonated accidentally.

கல்லறையைக் குறிக்கும் Cementery என்பது தொடக்க காலத்திலிருந்தே சிமென்ட்டினால் கட்டப்பட்ட ஒன்றுதானா? - அந்த வார்த்தையேகூட சிமென்ட்டினால் கட்டப்பட்ட ஒன்று அல்ல! அது cementery அல்ல, cemetery. இறப்பை உறக்கத்தோடு பலரும் (‘உறங்குவது போலும் சாக்காடு’ என்ற வள்ளுவர் உட்பட) ஒப்பிட்டதுண்டு. பண்டைய கிரேக்கர்களும் இப்படி நினைத்ததால்தான் cemetery என்ற சொல் உருவானது.

புதைக்கும் இடத்தை koimeterion என்று அவர்கள் கூறத் தொடங்கினார்கள் இந்த சொல்லுக்கான அவர்களது தொடக்க காலப் பொருள் 'தூங்கும் அறை’ என்பது. Koiman என்றால் உறங்க வைப்பது என்று பொருள். Koimeterion மருவி ஆங்கிலத்தில் cimiterium, cimiterie என்றாகி நாளடைவில் cemetery ஆகிவிட்டது!

Nuclear umbrella என்பது என்ன? - அணு ஆயுதங்கள் கொண்ட ஒரு நாடு, அந்த வசதி இல்லாத தனது நேச நாடுகளுக்கு வழங்கும் ‘கவலைப்படாதீர்கள். உங்கள் மீது வேறு ஏதாவது நாடு அணு ஆயுதத்தை வீசுவதாக பயமுறுத்தினால் நாங்கள் உங்கள் உதவிக்கு வருவோம்’ எனும்படியான உத்தரவாதத்தை Nuclear umbrella என்பார்கள்.

Memoirs என்பதும் Autobiography என்பதும் ஒன்றுதானா? - ஒரு எழுத்தாளர் தன்னுடைய அனுபவத் தொகுப்புகளை வெளியிட்டால் அது memoirs. அது அவரது முழுமையான வாழ்க்கை வரலாறாக இல்லாமல் போகலாம். ஒருவரது சுய சரிதைதான் autobio graphy.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x