Published : 16 Jul 2024 06:05 AM
Last Updated : 16 Jul 2024 06:05 AM
நாங்கள் அவரை ‘அம்மா’ என்றே அழைப்போம். அவர் தமிழ் பயிற்றுவிப்பவர் என்பதால் அல்ல தாயன்பை எங்களிடம் வெளிப்படுத்தியதால். அவர் பார்வையை இழந்தவர். பிறவியிலேயே அல்ல. வாழ்வின் பிற்பாதியில் இளங்கலை தமிழ் பட்டம் படித்துவிட்டு உலகத்தை ரசித்த அவர் தன் பார்வையை இழந்ததும் உலகம் ரசிக்கும்படியானார்.
வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவ மாணவிகளின் பெயர் மற்றும் குரல்கள் அவருக்கு நினைவில் ஊறியவை. யார் ஒருவரின் சிறிய சலசலப்பும் அவரின் காதுகளுக்கு தெளிவுறக் கேட்கும். உடனே பெயர் சொல்லி நிசப்தமாக்கிவிடுவார்.
மனவலிமையை நான் கற்றுக்கொண்டது அவரிடம்தான். அவர் ஒருநாளும் தான் பார்வை இழந்துவிட்டோமே என்று எங்களிடம் கூறி வருந்தியதில்லை. அதுதான் அவர் எங்களுக்கு அளித்த படிப்பினை. என் தாய் வாழ நான் அரும்பாடுபடுவேன்.
- கா.ஆதிகேசவன், அரசு உயர்நிலைப்பள்ளி, மேலநெட்டூர், சிவகங்கை மாவட்டம்.
கடந்த வாரம், ‘கல்வி தந்த பிரகாசமான பார்வை’ பதிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அருமையான கட்டுரை எழுதி அனுப்பிய மாணவர் கா.ஆதிகேசவனுக்கு பாராட்டுகள்.
இந்த வார கேள்வி: தனது பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த மலையாள சிறுகதையை இந்தியில் மொழிபெயர்த்த 8ஆம் வகுப்பு மாணவர் ஆரியா தாக்கூர் பற்றி கேள்விப்பட்டீங்களா? பிஹாரில் இருந்து கேரளாவுக்கு புலம்பெயர்ந்து முடிதிருத்தும் பணி செய்து வரும் தொழிலாளரின் மகன் இவர். இந்த செய்தி நமக்கு சொல்லும் சேதி என்ன? என்பதை 100 சொற்களுக்கு மிகாமல் குட்டிக் கட்டுரையாக எழுதி vetrikodi@hindutamil.co.in மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர், வகுப்பு, பள்ளி விவரம், அலைபேசி எண், புகைப்படத்துடன் அனுப்புங்கள். சிறந்த கட்டுரைக்கு சிறிய பரிசு காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT