Published : 18 Jun 2024 07:27 AM
Last Updated : 18 Jun 2024 07:27 AM
வரலாற்றை மறுக்கட்டமைக்க பண்டைய மாந்தர்கள் விட்டுச் சென்ற கற்கருவிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், நீத்தார் நினைவுச் சின்னங்கள், உலோகப் பொருட்கள், சிற்பங்கள், கட்டிடக்கலை ஆகியவை பயன்படுகின்றன. இவை ஒரு சமூகத்தினுடைய அடிப்படை வாழ்வியல் கூறுகள், எழுத்தறிவு, மொழியறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி, வணிக தொடர்புகள், சமூக கட்டமைப்பு உள்ளிட்டவற்றை நமக்கு எடுத்துரைப்பதால் தொல்லியல் ஆய்வுகளையும், அதன் ஊடான அடிப்படைக் கல்வியையும், கலையியல் சார்ந்த
புலமாக தற்போது வரை இந்தியாவில் கற்பிக்கப்பட்டு வருகிறது.
தொல்லியல் சார்ந்த கல்வியை கற்கின்ற மாணவர்களும் பெரும்பாலும் கலையியல் சார்ந்த புலங்களிலிருந்து வருகின்றவர்களாக இருக்கின்றார்கள். அறிவியல் தொழில்நுட்பங்கள் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்று தொன்மை வாய்ந்த இந்திய நாட்டினுடைய தொல் வரலாறையும், குறிப்பாக கற்காலம் தொட்டு பல லட்சம் ஆண்டுகளாக தொடர்ந்து இந்த மண்ணில் மனிதர்களின் வாழ்வியல் தடங்களை கொண்டிருக்ககூடிய தமிழ்நாடு போன்ற பகுதியினுடைய தொன்மை வரலாற்றை மிகத் துல்லியமாக கூற முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT