Published : 24 Jul 2023 04:21 AM
Last Updated : 24 Jul 2023 04:21 AM

ப்ரீமியம்
வெள்ளித்திரை வகுப்பறை 06: மனப்பாடம் மட்டும்தான் திறமையா?

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், ‘கலகல வகுப்பறை’,‘சீருடை-ஆசிரியர்கள் குறித்த திரைப்படங்கள்’ நூல்களின் ஆசிரியர். தொடர்பு: artsiva13@gmail.com

தேர்வு. இந்த ஒற்றை வார்த்தை குழந்தைகள் மனதிற்குள் கலவரத்தை ஏற்படுத்துகிறது. தேர்வு பயம் என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். தேர்வின் மீது குறிப்பாக அரசு பொதுத் தேர்வுகள் மீது பயத்தை நாமே உருவாக்குகிறோம். அதன் காரணமாகத்தான் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு சில விபரீத முடிவுகள் நிகழ்கின்றன. தோல்வியை மன உறுதியோடு தாங்குவது எப்படி என்று நாமே வகுப்பெடுக்கவும் செய்கிறோம்.

குழந்தைகளுக்கு தேர்வு, பயமல்ல. குழப்பம். கேட்ட பாடத்தைச் சொல் என்றால் சொல்லிவிடும் குழந்தையால் எழுதுவது குழப்பமானதாக இருக்கிறது. எழுத்து என்பது வேறு மொழி. தொடக்கப் பள்ளி முழுவதும் எழுத்துகளை அறிமுகப்படுத்தி வாசிக்கச் சொல்லிக் கொடுத்தாலும் எழுதுவது என்பது மட்டும் ஏன் கடினமாகவே இருக்கிறது?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x