Last Updated : 28 Aug, 2017 10:55 AM

 

Published : 28 Aug 2017 10:55 AM
Last Updated : 28 Aug 2017 10:55 AM

குத்துச்சண்டையில் மேவெதர் புதிய சாதனை

அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரரான மேவெதர், தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் 50-வது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தார்.

அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாயிட் மேவெதர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அயர்லாந்தின் பிரபல குத்துச்சண்டை வீரரான மெக் கிரிகோருக்கு எதிராக நேற்று மீண்டும் குத்துச்சண்டை களத்தில் இறங்கினார். இப்போட்டியின் முதல் 9 சுற்றுகளில் இரு வீரர்களும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினர். இந்நிலையில் 10-வது சுற்றில் மேவெதர் ஆவேசமான தாக்குதலை நடத்தினார். மேவெதர் விட்ட சரமாரியான குத்துகளால் நிலைகுலைந்த கிரிகோரின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் நடுவர்கள் போட்டியை நிறுத்தினர். மேவெதர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

இந்த வெற்றி, குத்துச்சண்டை களத்தில் மேவெதர் பெற்ற 50-வது தொடர் வெற்றி ஆகும். இதன்மூலம் குத்துச்சண்டையில் தொடர்ந்து 49 வெற்றிகளைக் குவித்த பிரபல குத்துச்சண்டை வீரர் ராக்கி மார்சியானோவின் சாதனையை அவர் முறியடித்தார். குத்துச்சண்டை உலகில் புதிய சாதனையை படைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மேவெதருக்கு 24 காரட் கொண்ட 1.5 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட பெல்ட் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பெல்ட்டில் 3,360 வைரக் கற்கள், 600 நீலமணிக் கற்கள், 160 மரகதக் கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x