Published : 30 Sep 2013 11:12 PM
Last Updated : 30 Sep 2013 11:12 PM

முகேஷுக்கு பதிலாக புகைப்பழக்கத்துக்கு எதிரான புதிய விளம்பரம்!

புகைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புதிய பிரசாரப்படத்தை மத்திய அரசு வெளியிடவுள்ளது.

இந்த விளம்பரம், புகைப்பழக்கத்தால் உடல் நலனுக்கு ஏற்படும் கேடுகளைப் பற்றியும், பொது இடங்களில் விதிகள் மீறி புகைப்பிடிப்பவர்களிடம் அபராதம் விதிப்பது தொடர்பாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

'சைல்ட்' அண்ட் 'துஹான்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த விளம்பரம்,, திரைப்படங்களில் இப்போது ஒளிபரப்பாகிவரும் 'முகேஷ்' மற்றும் 'பஞ்சு' விளம்பரத்துக்குப் பதிலாக ஒளிபரப்பாகும்.

புகையிலைக்கு எதிரான சட்டம் அமல்படுத்தி 5 ஆண்டுகள் நிறைவடையும் அக்டோபர் 2-ம் தேதி முதல், இந்தப் புதிய விளம்பரம் ஒளிபரப்பாகும்.

16 மொழிகளில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த விளம்பரங்கள், புகையிலைப் பொருட்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை மையமாகவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x