Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM

மேன்மை தரும் மெக்கட்ரானிக் படிப்பு

நவீன யுகத்தில் மனிதனுக்கு இணையாக இயந்திரங்கள் செயலாற்று திறன் கொண்ட ரோபாட்டிக் மற்றும் ஆட்டோமேஷன் துறை அபார வளர்ச்சி கண்டு வருகிறது. இத்துறையில் சாதிக்க விரும்புபவர்கள் மெக்கட்ரானிக் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கலந்ததாக இப்படிப்பு விளங்கு கிறது. ரோபாட்டிக், ஆட்டோமெஷன் இன் மெக்கானிக்கல் துறையில் சாதித்துக் காட்டக்கூடிய சவாலான படிப்பு. பெட்ரோல் பங்க் முதல் பொக்லைன் வண்டிகள் வரை ஆட்டோமெஷன், ரோபாட்டிக் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நிறைந்துள்ளதால், எதிர்கால நவீன தொழில்நுட்பத்துறைக்கு ஏற்ற படிப்பாக உள்ளது.

இப்படிப்பின் கோர் சப்ஜெக்டாக மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், சிஸ்டம் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினீயரிங் இடம் பெற்றுள்ளது. ரோபாட்டிக்ஸ் ஆட்டோமெக்கானிக்கல் படிப் பில் ஆராய்ச்சி வரையிலான மேற்படிப்புகள் மூலம் பிரகாசிக்க முடியும்.ஏர்ஃபோர்ஸ், ரோபாட்டிக் நிறுவனம், ராணுவம், ஆட்டோ மேடிவ் கம்பெனிகளில் வேலைவாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.

இந்தியாவில் பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள், வெளிநாடு களில் மேற்படிப்பு படிக்க கூடுதல் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஜெர்மனியில் இப்படிப்புக்கான பட்டமேற்படிப்பு படிப்பது சிறப்பாக இருக்கும். பட்டப்படிப்பு படிக்கும்போதே, கூடுதலாக ஜெர்மன் மொழியை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு காத்திருக் கிறது என்று கூறலாம். தமிழகத்தில் இப்படிப்புகளை 20க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் வழங்குகின்றன. அரசு பொறியியல் கல்லூரியில் இப்படிப்பு இல்லை. பொறியியல் கலந்தாய்வு மூலம் இப்படிப்பை மாணவ, மாணவியர் தேர்வு செய்யலாம். தனியார் கல்லூரிகளில் படிக்க விரும்புபவர்கள், அக்கல்லூரியில் ரோபாட்டிக் ஆய்வக கூடம் இருக்கிறதா, திறன்மிக்க ஆசிரியர்கள் உள்ளனரா என ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொண்டபிறகு, சேர்வது நலம். தியரிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், பயிற்சிக்கும் நல்ல வாய்ப்பு அளிக்கும் கல்லூரிகளைத் தேர்வு செய்வது முக்கியம்.

இப்படிப்பை முடித்துவிட்டு எம்.இ., எம்.டெக்., பட்டமேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள் NIT, IIT ஆகியவற்றின் மூலம் கேட் நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு பிரச்சினை உள்ளது. கேட் நுழைவுத் தேர்வில் மெக்கட்ரானிக் இன்ஜினீயரிங் பாடப்பிரிவு இடம் பெறவில்லை. இதனால், இவர்கள் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான படிப்புகளை தேர்வு செய்து, நுழைவுத்தேர்வு எழுத வேண்டியுள்ளது. படித்த படிப்புக்கு அப்பாற்பட்டு, வேறு பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து நுழைவுத் தேர்வு எழுதும்போது தேர்ச்சி பெறுவது கடினம் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். எனவே, இதில் பட்டமேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள் இந்த விஷயத்தை தெரிந்துகொண்டு, இந்த பட்டப்படிப்பில் சேர்வது சாலச் சிறந்தது.

கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.டெக்.ரோபாட்டிக் இன்ஜினீ யரிங் படிக்கலாம். மேற்பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சார்ந்த படிப்புகளும், எம்.இ. மெக் கானிக்கல் அல்லது ரோபாட்டிக் இன்ஜினீயரிங் படிக்கலாம். நவீன தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் அபார வளர்ச் சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய இந்த படிப்பை படித்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x