Last Updated : 03 May, 2023 04:23 AM

 

Published : 03 May 2023 04:23 AM
Last Updated : 03 May 2023 04:23 AM

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உணவகங்களில் விலைப் பட்டியல், தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை சீசனை முன்னிட்டு தினமும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. நகர் பகுதி மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால். உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிப்படுகின்றனர்.

இதற்கிடையே, சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து உண வகங்களில் வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்கின் றனர். கொடைக்கானலில் பெரும் பாலான உணவகங்களில் விலைப் பட்டியல் இல்லை. இதனால் சாப்பிட்டு முடித் தவுடன் கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு சுற்றுலாப் பயணிகள் தள்ளப்படுகின்றனர்.

பல இடங்களில் கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. கூடுதல் விலை கொடுத்தாலும் உணவுப் பொருட்கள் தரமில்லாமலும், சுகாதாரம் இல்லாமலும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, உண வகங்களில் விலைப் பட்டியல் மற்றும் தரமான உணவு கிடைப் பதை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுகாதாரமான உணவு தேவை: சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி குகன் கருணா கரன் கூறியதாவது: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் ஹோட்டல்கள், விடுதிகளில் கூட் டம் நிரம்பி வழிகிறது. அதனால் தங்கும் விடுதிகளின் வாடகையும் அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகையைக் குறிவைத்து உணவகங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

குறிப்பாக, தண்ணீர் பாட்டில் உட்பட உணவுப் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. சில இடங்களில் விலைப் பட்டி யலில் இருப்பதைவிட அதிகமாக வசூலிக்கின்றனர். பணம் கொடுத்தாலும் அந்த உணவு தரமில்லாமல் உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உணவகங்களில் சுகாதாரம், உணவுப் பொருட்களின் தரத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் உறுதி செய்ய வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.

விலைப் பட்டியல் அவசியம்: கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரபத்திரன் கூறு கையில், கோடை சீசனையொட்டி கொடைக்கானலின் முக்கியச் சாலைகளில் திரும்பிய திசை யெல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்த இடமில் லாமல் சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் நிறுத்திச் செல்கின்றனர்.

சீசன் காலத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இல்லை யெனில் பசுமைப் பள்ளத்தாக்கு முதல் பைன் பாரஸ்ட் வரை உள்ள பகுதியில் இருக்கும் மரங்களை அகற்றிவிட்டு கட்டண வாகனக் காப்பகம் அமைக்க வேண்டும், என்றார்.

குழுவினர் ஆய்வு: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தர மான உணவு கிடைப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் அவ்வப்போது உணவகங்களில் ஆய்வு மேற் கொண்டு உணவின் தரத்தைக் கண்காணிக்கின்றனர்.

கொடைக்கானலில் தற்போது வரை 500 உணவகங்கள் உரிமம் பெற்றுள்ளன. உரிமம் பெறாதவர்களை உரிமம் பெறவும், உணவு விலைப் பட்டியல் வைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x