Published : 20 Apr 2023 06:00 AM
Last Updated : 20 Apr 2023 06:00 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் சுகாதாரமின்றி இயங்கிய 18 உணவகங்களுக்கு தலா ரூ.3,000 அபராதம் விதிக் கப்பட்டது. கொடைக்கானலுக்கு கோடை சீசனை முன்னிட்டு தினமும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் அறிவுத்தலின்படி, திண்டுக்கல் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலை வாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
கொடைக்கானல் மூஞ்சிக்கல், அண்ணாசாலை, ஏரிச்சாலை ஆகிய பகுதிகளில் உள்ள உண வகங்கள், சாக்லேட் விற்பனை கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் சுகாதாரமின்றி இயங்கிய, காலாவதியான பொருட்கள் வைத்திருந்த மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு முர ணாக உணவு தயாரித்த 18 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் அந்த உணவ கங்களுக்கு தலா ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது. காலாவதியான உணவு பொருட்களை அலு வலர்கள் பறிமுதல் செய்தனர்.
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கேண்டீன்கள் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.
இங்கு பால், பழம், பிஸ்கட் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகி ன்றன. இந்நிலையில் மருத்து வமனையில் பிரசவத்துக்காக வந்த பெண்ணின் கணவர், கேண் டீனில் கெட்டுப்போன புரோட்டா வழங்கியதாக வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது.
இதனைத்தொடர்ந்து உணவு பாது காப்பு அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்து உணவின் தரம் குறித்து சோதித்தனர். இதில் காலாவதியான டீத்தூள், ரொட்டி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT