Published : 03 Apr 2023 06:14 AM
Last Updated : 03 Apr 2023 06:14 AM
மேட்டூர்: விடுமுறை தினத்தையொட்டி, மேட்டூர் அணைப் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. பார்வையாளர் கட்டணமாக ரூ.25,770 வசூலானது.
மேட்டூர் அணைப் பூங்காவுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று, காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். காவிரியில் நீராடி, அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனர். பின்னர் அணைப் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
மீன்காட்சி சாலை, பாம்புப் பண்ணை, மான் பண்ணை, முயல் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
நேற்று ஒரே நாளில் அணைப் பூங்காவிற்கு 5,154 பேர் வந்து சென்றனர். பார்வையாளர் கட்டணமாக ரூ.25 ஆயிரத்து 770 வசூலானது.
அணையின் பவளவிழா கோபுரத்தைக் காண 524 பேர் வந்து சென்றனர். இதன் மூலம், 2,620 வசூலானது குறிப்பிடத்தக்கது.
நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,410 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,562 கன அடியாக அதிகரித்தது. குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 68.50 டிஎம்சியாகவும், நீர்மட்டம் 102.79 அடியாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT