Published : 03 Apr 2023 06:16 AM
Last Updated : 03 Apr 2023 06:16 AM
கூடலூர்: தேக்கடியில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. தொடர்ந்து இதே நிலை நீடிப்பதால் 3 படகுகள் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டன.
முல்லை பெரியாறு அணை நீர்த்தேக்கத்தின் ஒருபகுதியில் தேக்கடி படகு குழாம் அமைந் துள்ளது. வனத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவர, வனத்துறை மற்றும் கேரள சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன.
தினமும் காலை 7.30 மணி, 9.30, 11.15, பிற்பகல் 1.45, 3.30 மணி என்று ஐந்து முறை படகுகள் இயக்கப்படுகின்றன. இதற்காக நுழைவுக் கட்டணமாக ரூ.45-ம், படகுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படும் பேருந்துக்கு ரூ.20-ம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர படகுப் பயணத்துக்காக தனியே ரூ.255 பெறப்படுகிறது.
1.30 மணி நேர பயணத்தில் தேக்கடி ஏரியில் நீர் அருந்த வரும்யானை, காட்டு மாடு, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளைப் படகில் இருந்தபடியே பார்த்து ரசிக்கலாம். தற்போது தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வு நடப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது.
இதனால், தினமும் இயக்கப்பட்ட 6 படகுகள் மூன்றாகக்குறைக்கப்பட்டுள்ளன. மே மாதம்முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் நிறுத்தப்பட்ட 3 படகுகளுக்கு வண்ணம் பூசுதல் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. அதற்கேற்ப படகுகளின் இயக்கம் குறைக்கப்பட்டது.
இது குறித்து கேரள வனத் துறையினர் கூறுகையில், 6 படகு கள் இயக்குவதன் மூலம், ஒரு தடவைக்கு சுமார் 540 பயணிகள் செல்ல முடியும். தற்போது 3 படகுகள் மட்டும் இயங்குவதால் 300 பேர் செல்லும் நிலை உள்ளது. தேர்வு முடிந்ததும் சில வாரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். அப்போது படகுகள் அனைத்தும் முழுவீச்சில் இயக் கப்படும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT