Published : 27 Mar 2023 06:09 AM
Last Updated : 27 Mar 2023 06:09 AM
உதகை: இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக, சுற்றுலா துறை அமைச்சர்கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகைபடகு இல்லத்தில் பல்வேறு பகுதிகளில் சாகச விளையாட்டு, கேம்பிங், மரவீடு, உணவகம்அமைப்பதற்காக நடைபெற்றுவரும், பல்வேறு வளர்ச்சி பணிகளை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
உதகை படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பில் பொது - தனியார் கூட்டு திட்டத்தின் கீழ், ஜிப் லைன், மிதிவண்டி, பங்கி ஜம்பிங், தொங்கு பாலம் போன்ற சாகச விளையாட்டுகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், படகு இல்லம் பகுதியில் ரூ.3.20 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாகச மற்றும் கேம்பிங், மரவீடுஉள்ளிட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
படகு இல்லத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்திய அமைச்சர், படகுஇல்லத்தை சுற்றி சுற்றுச்சுவர்கட்டி, அதில் எழில் ஓவியங்கள்வரைந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்க வேண்டுமென சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, "இந்தியாவிலேயே தமிழ்நாடு சுற்றுலா துறை முதல் இடத்தில் உள்ளது. நீலகிரிமாவட்டத்திலுள்ள உதகை படகு இல்லத்தில், சாகச விளையாட்டுகளுக்கான பணி, ரூ.5 கோடி மதிப்பீட்டில் பொது - தனியார்கூட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்றுவருகிறது.
தொட்டபெட்டாவிலிருந்து வேலிவியு வரை விரைவில் ரோப்கார் அமைக்கும் பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்துக்கு 2021-2022-ல் 12 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். நடப்பாண்டு 2022-2023 மார்ச் மாதம் வரை 22 லட்சம் பேர் வந்துள்ளனர்.
பைக்காரா படகு இல்லத்தில் மிதவை உணவகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற பணிகள் முடிவுற்ற பிறகு, நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்கள் வளர்ச்சியடையும்" என்றார். ஆய்வின்போது மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், உதகை படகு இல்லம் மேலாளர் சாம்சன் கனகராஜ், உதகை வட்டாட்சியர் ராஜசேகர் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT