Published : 01 Feb 2023 03:31 AM
Last Updated : 01 Feb 2023 03:31 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சி எல்லைக்குள் நுழையும் அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெடுஞசாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுலாப் பேருந்து ரூ.250, பேருந்து - ரூ.150, கனரக வாகனங்கள் - ரூ.100, வேன், மினி லாரி மற்றும் டிராக்டர் - ரூ.80, சுற்றுலா மற்றும் வாடகை சிற்றுந்து - ரூ.60
ஆக சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு கட்டணம் இல்லை. கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து நகராட்சி அனுமதி பெற்று விலக்களிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, உரிய ஆவணங்களை நகராட்சியில் சமர்ப்பித்து தங்கள் வாகனங்களுக்கு அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT