Published : 04 Jan 2023 04:10 AM
Last Updated : 04 Jan 2023 04:10 AM

சூழல் சுற்றுலா பயணிகளுக்கு மினி பேருந்து சேவை: சத்தி புலிகள் காப்பகத்தில் தொடக்கம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், சூழல் சுற்றுலா பயணிகளுக்காக மினி பேருந்து சேவையை ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்  தரன் தொடங்கி வைத்தார்.

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சூழல் சுற்றுலா பயணிகளுக்காக மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் உள்ளது. இந்நிலையில், சத்தியமங்கலம் வனக்கோட்டத்துக்கு சூழல் சுற்றுலா மேம்பாட்டுக்காக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சீனிவாசன் சேவை அறக்கட்டளை சார்பில் புதிய மினி பேருந்து வழங்கப்பட்டுள்ளது. புலிகள் காப்பகத்தை பார்வையிட வருகை தரும் சூழல் சுற்றுலா பயனாளர்களுக்கு பயன்படும் வகையில் இந்த புதிய வாகனம் இயக்கப்படும்.

இதன் பயன்பாட்டை ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார்.

இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு வனத்துறை இயக்குநர்களுக்கு 12 ஜிபிஎஸ் கருவிகள், 180 சர்ச் லைட்டுகள் உள்ளிட்டவற்றை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வழங்கியுள்ளது.

இரவு ரோந்துப் பணியின்போதும், வேட்டைத் தடுப்பு பணிகளின் போதும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் தற்போது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சூழல் சுற்றுலா பயணிகளுக்கு மினி பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது, என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x