Published : 19 Dec 2022 04:13 AM
Last Updated : 19 Dec 2022 04:13 AM
உதகை: தொடர் விடுமுறை காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட உதகையில் சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளனர்.
பள்ளி அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா,ஷூட்டிங்மட்டம் ஆகிய பகுதிகளுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதனால், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் உணவு விடுதிகள், ஹோட்டல்களில் மதிய நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் நிரம்பியுள்ளன.
இவர்கள் முதுமலை வழியாக உதகை வர வேண்டும் என்பதால், முதுமலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் உதகையில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். தொட்டபெட்டாவில் ‘ஜில்’ என்ற பனிக்காற்று எந்நேரமும் வீசும். இதனால்,தற்போது உதகையில் குளிரான காலநிலை நிலவுகிறது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, கமர்சியல் சாலையைஒருவழிப்பாதையாக போலீஸார்மாற்றியுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால்வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT