Published : 30 Sep 2019 09:20 AM
Last Updated : 30 Sep 2019 09:20 AM
புதுடெல்லி
உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடான சவுதி அரேபியா தனது பொருளாதாரத்தை மேம் படுத்திக்கொள்ள இந்தியாவில் நீண்டகால அடிப்படையில் ரூ. 7 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
எண்ணெய் உற்பத்தியை மட்டுமே நம்பியிருக்காமல், பிற தொழில்களிலும் கால்பதிக்க இந்த முடிவை சவுதி அரேபியா எடுத்துள் ளது. பெட்ரோகெமிக்கல், உட்கட்டமைப்பு, சுரங்கங்கள் உள் ளிட்ட துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் இந்தியத் தூதர் சவுத் பின் முகமது அல்சதி இதுகுறித்து கூறியதாவது, “இந்தியா முக்கிய முதலீட்டு சந்தை யாக விளங்குகிறது. சவுதி அரேபியா தன்னுடைய பொருளா தாரத்தைப் பலப்படுத்த இந்தியா வில் முதலீடு செய்ய தீவிரமாக உள்ளது. இந்தியாவுடன் நீண்ட கால தொழில் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் முதலீடுகள் திட்டமிடப்படும். ரூ.7 லட்சம் கோடி வரை முதலீடு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனர்ஜி, ரிஃபைனிங், பெட்ரோகெமிக்கல், உட்கட்டமைப்பு, விவசாயம், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் போன்ற துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்படலாம்.
ஏற்கெனவே சவுதி அராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் இண்ட ஸ்ட்ரீஸுடன் தொழில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாட்டுக்கும் இடையிலான தொழில் பந்தத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். சவுதி இளவர சரின் ‘விஷன் 2030’ என்ற தொழில் கொள்கையில் இந்தியா- சவுதி அரேபியா இடையிலான தொழில் உறவுக்கு மிக முக்கிய மான இடம் அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT