Published : 02 Nov 2024 05:29 PM
Last Updated : 02 Nov 2024 05:29 PM
கோவை: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலம் அருவிக்கு கடந்த 3 நாட்களில் சுமார் 9,150 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி சாடிவயல் அருகே உள்ள கோவை குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டு குளித்து வருகின்றனர்.கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேலும், கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் மிதமான அளவில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.
வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சிக்கு சென்று வர கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதுகுறித்து, போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரநாத் கூறுகையில், “தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாளில் 2440 பேரும், நேற்று முன்தினம் 3,320 பேரும், இன்று 3391 பேர் என மொத்தம் 9150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்,” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT