Published : 22 Apr 2024 05:28 AM
Last Updated : 22 Apr 2024 05:28 AM

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் ‘மே ஃபிளவர்’ - சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்

முதுமலையில் சாலையோரத்திலுள்ள மரங்களில் பார்வையாளர்களை கவரும் வகையில் பூத்துள்ள மேஃபிளவர் பூக்கள்.

உதகை: நீலகிரி மாவட்ட சாலையோர மரங்களில் பூத்துள்ள ‘மே ஃபிளவர்’ மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில், டிலோ னிக்ஸ் தாவர குடும்பத்தை சேர்ந்த சிவப்பு வண்ணத்தில் பூக்கும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ‘மே ஃபிளவர்’, மே மாதத்தில் பூத்துக்குலுங்கும். தற்போது, கோடையை வரவேற்கும் வகையில் குன்னூர், முதுமலை, கூடலூர் மலைப்பாதையில் பூத்துள்ளன.

செல்ஃபி எடுக்க ஆர்வம்: சாலைகளின் இருபுறமும் பசுமை நிறைந்த மலைகளுக்கு இடையே பூத்துக்குலுங்கும் மலர்களை புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கூடலூர் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், வனப் பகுதியிலுள்ள பெரும்பாலான மரங்களில் இலைகள் உதிர்ந்து பசுமை இழந்து காணப்படுகிறது. அதேவேளை, கோடைகாலத்தில் பொலிவாக காணப்படும் ‘கொன்றை, மே ஃபிளவர்,ஜெகரண்டா' மலர்கள் பல இடங்களில் பூத்து, பார்வையாளர்களை பரவசப்படுத்தி வருகின்றன.

சுற்றுலா பயணிகள் கூறும் போது, ‘‘சாலையோரங்களில் இத்தகைய மரங்களை அதிகளவில் நடவு செய்ய வேண்டும். இதனால், கோடை காலங்களில் மலை மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரம்மியத்தை ரசித்து பயணிக்கலாம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x