Published : 27 Jan 2024 08:21 AM
Last Updated : 27 Jan 2024 08:21 AM
கொடைக்கானல்: தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப் பட்டது. தைப்பூசம், குடியரசு தின விடு முறை, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டு வந்தனர். பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம், தூண்பாறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தங்கும் விடுதிகள் முழு மையாக நிரம்பின.
ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியைச் சுற்றி குதிரை சவாரி, சைக்கிளிங் செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். நேற்று குடியரசு தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு அனைவரும் இலவசமாக அனுமதிக் கப்பட்டனர். காலை முதலே இதமான தட்பவெப்ப நிலை நிலவியது. தரையிறங்கி வந்த மேகக்கூட்டங்கள், பனிமூட்டத் துக்கு நடுவில் இயற்கை காட்சி களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களால் நகர் மட்டுமின்றி சுற்றுலா இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதை தடுக்க விடுமுறை நாட்களில் கூடுதல் போலீஸாரை தற்காலிக பணியாக கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்து மாவட்ட காவல்துறை போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT