Published : 10 Nov 2023 04:04 AM
Last Updated : 10 Nov 2023 04:04 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சபரிமலை சீஸன் வரும்17-ம் தேதி தொடங்குவதால், சுற்றுலா படகுகள் சீரமைக்கப்பட்டு நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு இயக்கப்படும் 3 சுற்றுலா படகுகளில் ‘குகன்’ படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால், கடந்த மாதம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தொடர்ந்து ‘விவேகானந்தா’ என்ற மற்றொரு சுற்றுலா படகையும் சீரமைக்கும் பணி சின்னமுட்டம் துறைமுகத்தில் நடந்து வந்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகமானோர் கன்னியாகுமரி வருவர். இதனால் கூட்டத்தை சமாளிப்பதற்காக ‘விவேகானந்தா’ படகை சீரமைக்கும் பணி அவசர அவசரமாக 3 நாட்களில் முடிக்கப்பட்டது. இப்படகு நேற்று காலை சின்னமுட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கடலில் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT