Published : 21 Oct 2023 03:26 PM
Last Updated : 21 Oct 2023 03:26 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு ஏற்கெனவே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் அந்த சேவை சில மாதங்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் சிறிய வகை பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி 2 நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அந்த நிறுவனத்தினர் இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் துறை முக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை மையமாக வைத்து பல்வேறு இடங்களுக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து இலங்கை காங்கேசன்துறை, தூத்துக்குடி-கொழும்பு, ராமேசுவரம் - தூத்துக்குடி-கன்னியாகுமரி ஆகிய கப்பல் சேவை தொடங்குவதற்காக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துடன் வஉசி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மும்பையில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச கடல்சார் உச்சிமாநாட்டில் புரிந்துணரவு ஒப்பந்தம் கையெழுத்தா கிபுள்ளது.
இதுகுறித்து துறைமுக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்குவதற் கான ஒப்பந்தம் கையெழுத்தாகிள்ளது. 300 பயணிகள் செல்லும் வகையிலான கப்பல்கள் இயக்கப்பட உள்ளன.
சில மாதங்களுக்குள் பயணிகள் கப்பல் தூத்துக் குடி வந்து சேரும். உடனடியாக தூத்துக்குடியில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கும், அதனை தொடர்ந்து கொழும்பு, ராமேசுவரம்-தூத்துக்குடி-கன்னியாகுமரிக்கும் கப்பல் சேவை தொடங்க நட வடிக்கை எடுக்கப் படவுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT