Published : 16 Oct 2023 04:06 AM
Last Updated : 16 Oct 2023 04:06 AM
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக சைரன் மற்றும் பிளிங்கர் லைட் பொருத்திய பைக்குகளை விரைவில் அறிமுகப்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங் களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து விடுவது வழக்கமாகிவிட்டது.
கடற்கரைச் சாலை, பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்துள்ள ‘ஒயிட் டவுன்’ பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வலம் வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய புதுச்சேரி காவல்துறை பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வானங்களை நிறுத்த புதிய செயலியை போக்குவரத்து காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் சைரன்,பிளிங்கர் லைட் பொருத்திய பைக்குகளை ரோந்து பணியில் ஈடுபடுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான முன்னோட்டமாக ரோந்துக்குப் பயன்படுத்தும் வகையிலான பைக் ஒன்றை காவல்துறை துணைத் தலைவர் பிரிஜேந்திர குமார் நேற்று ஆய்வு செய்தார். அதில், மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகளை போலீஸாருக்கு வழங்கினார். அப்போது எஸ்.பி ஸ்வாதி சிங், பெரியகடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.
இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் கூறியதாவது: கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் போது, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பெண்களை கிண்டல் செய்வது, திருட்டு உள்ளிட்டவை நடக்காமல் தடுக்வும், பாதுகாப்பு அளிக்கும் வகையில் சைரன், பிளங்கர் லைட் பொருத்திய 3 பைக் ரோந்து பணியில் ஈடு படுத்தப்பட இருக்கிறது.
இந்த பைக்குகள் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். ஒவ்வொரு பைக்கிலும் தலா ஒருகாவலர் இந்த பணியில் ஈடுபடுவார். விரைவில் இது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர். இந்த பைக்குகள் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT