Last Updated : 04 Oct, 2023 07:21 PM

 

Published : 04 Oct 2023 07:21 PM
Last Updated : 04 Oct 2023 07:21 PM

செட்டிநாடு பாரம்பரிய கட்டிட கலையை பறைசாற்றும் கானாடுகாத்தான் அரண்மனை!

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் அரண் மனை செட்டிநாடு பாரம்பரிய கட்டிடக் கலையை பறைசாற்றி வருகிறது. காரைக்குடி, கானாடுகாத்தான், பள்ளத்தூா், ஆத்தங்குடி உள்ளிட்ட பகுதி களில் 100 ஆண்டுகள் கடந்தும், இன்றும் செட்டிநாடு பங்களாக்கள் பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. பல நாடுகள் கடந்து வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த நகரத் தார் சமூகத்தினர் பிரம்மாண்ட இந்த பங்களாக்களைக் கட்டியுள்ளனர்.

இந்தக் கட்டிடங்கள் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டையின் வெள்ளைக்கரு கலந்த கலவையைக் கொண்டு கட்டி உள்ளனர். இங்கு சிறிய பங்களாக்கள் குறைந்தது 40 அடி அகலம், 120 அடி நீளமும், பெரிய பங்களாக்கள் குறைந்தது 60 அடி அகலம், 200 அடி நீளமும் கொண்டவையாக உள்ளன. இங்கு மின்விசிறி இல்லாமலேயே குளுமையாக இருக்கும். அதேபோல் குளிர் காலத்திலும் குளிரின் தாக்கம் தெரியாது.

இந்த வீடுகள் இறக்குமதி செய்யப்பட்ட உயர்ரக மரங்கள், கண்ணாடி வேலைப்பாடுகளுடன் அரண்மனை போன்று அமைக்கப்பட்டவை. பங்களாக்களில் காணப்படும் அலங்கார விளக்குகள், தேக்கு மரச் சாமான்கள், பளிங்கு கற்கள், கண்ணாடிகள், கம்பளங்கள் போன்றவை பெரும்பாலும் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

இதில் செட்டிநாடு அரண்மனை என்று அழைக்கப்படும் கானாடுகாத்தான் அரண்மனை உலகப் புகழ்பெற்றது. இந்த அரண்மனையைக் காண தமிழகம் மட்டு மின்றி வெளிமாநிலம், வெளிநாட்டு சுற்று லாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவிய ராஜா சர் அண்ணாமலை செட்டி யாரால் 1912-ம் ஆண்டு கட்டப்பட்டது. பளிங்கால் செய்யப்பட்ட பெரிய தூண்கள் நிரம்பிய அகண்ட தாழ்வாரம் இருக்கிறது. திருமணம், மதச் சடங்குகள் நடைபெறும் விசாலமான முற்றம் உள்ளது.

முற்றத்தின் ஒரு மூலையில் பூஜை அறை உள்ளது. இந்த அரண்மனையில் 1990 சதுர அடியில் 9 கார் நிறுத்தும் அறைகள், மின்தூக்கி (லிப்ட்) வசதியுடன் உள்ளன. இந்த அரண்மனை காரைக்குடியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x