Published : 07 Aug 2023 06:21 AM
Last Updated : 07 Aug 2023 06:21 AM

ஐஆர்சிடிசி சார்பில் கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரை அறிமுகம்

சென்னை: ஐஆர்சிடிசி சார்பில், தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை என்ற பெயரில் சுற்றுலா பயணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி அன்று காசியில் கங்கா ஸ்நானம் செய்த பிறகு, ராமேசுவரத்தில் ராமநாத சுவாமியை தரிசிக்கலாம். தென்காசியில் இருந்து நவ.9-ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு ரயிலில் புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக அலகாபாத்,காசி, கயா உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றுவரலாம்.

ஒன்பது நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.16,850 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை பெற 8287932122, 82879 32070 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon