Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM

முன்பதிவு இல்லாமல் - டிச.15 முதல் 3 ரயில்கள் இயக்கம் :

சென்னை

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து வருகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் மேலும் 3 முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க வாரியம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, பாலக்காடு - எர்ணாகுளம் (06797/06798), திருச்சி - திருப்பாதிரிப்புலியூர் (06889/06890) ஆகிய முன்பதிவு இல்லாத ரயில்கள் வரும் 15-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

15-ம் தேதி முதல் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் (06889) காலை 10.45 மணிக்கு திருச்சி செல்லும். 16-ம் தேதி முதல்திருச்சியில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் (06890) இரவு 8.40 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் செல்லும்.

பழநி - கோயம்புத்தூர் ரயில்களும் (06462/06463) வரும் 15-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. அதன்படி, பழநியில் இருந்து வரும் 15-ம் தேதி முதல் காலை 10.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (06462) மதியம் 1.15 மணிக்கு கோயம்புத்தூர் செல்லும்.

மறுமார்க்கமாக கோயம்புத்தூரில் இருந்து வரும் 15-ம்தேதி முதல் மதியம் 2 மணிக்குபுறப்படும் ரயில் (06463) மாலை 4.30 மணிக்கு பழநி செல்லும்.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x