Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சைவ அர்ச்சகர் ஓராண்டுசான்றிதழ் பயிற்சி வழங்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆகமஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தமிழில்முதுநிலை பட்டம், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்து சமய இலக்கியங்கள், தமிழக கோயில்கள் வரலாற்றில் போதிய கற்றறிவு பெற்றிருக்க வேண்டும். பள்ளி, கல்லூரியில் தமிழ் ஆசிரியராக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
மாத தொகுப்பு ஊதியமாக தலைமை ஆசிரியருக்கு ரூ.35 ஆயிரம் ஆகம ஆசிரியருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பொதுவாக கடந்த டிச.1-ம் தேதி 35 வயது நிரம்பாதவராக இருக்க வேண்டும். இந்து சமயத்தவராக, இந்து சமயத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். சைவ சமயக்கோட்பாடுகளை கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அலுவலகத்தில் நேரில் பெறலாம். www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கமும் செய்யலாம். உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ‘இணை ஆணையர் - செயல் அலுவலர் - தக்கார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை’ என்ற முகவரிக்கு வந்துசேர வேண்டும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT