Published : 11 Dec 2021 03:08 AM
Last Updated : 11 Dec 2021 03:08 AM
குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில் ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களை டிபிஜி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து அவர்களின் சேவையைப் பாராட்டினார்.
தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட 13 பேர்ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தநஞ்சப்பசத்திரத்தில் மீட்பு பணியில்ஈடுபட்ட மக்களை நேற்று சந்தித்து, அவர்களின் சேவையைப் பாராட்டினார். மேலும், அவர்களுக்கு கம்பளிகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறும்போது, “ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டபோது இப்பகுதி மக்கள் உரிய நேரத்தில் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். மேலும், தங்கள் வீடுகளில் இருந்த போர்வைகள் மற்றும்பொருட்களைக் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது சேவை பாராட்டத்தக்கது. இதனால், அவர்களுக்கு குன்னூர் சார்ஆட்சியர் மற்றும் காவல்துறை சார்பில் கம்பளிகள் வழங்கப்பட்டன.
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் ராணுவமுகாமுக்கு வருகிறார் என்பதால்,மாவட்டம் முழுவதும் பாதுகாப்புவளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. அவரது பயணம் வான் வழி என்றாலும், சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விபத்து தொடர்பாக கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை நடந்துவருகிறது. இதுவரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிகழ்வில், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், குன்னூர் சார் ஆட்சியர் தீபினா விஸ்வேஷ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT