Published : 10 Dec 2021 03:06 AM
Last Updated : 10 Dec 2021 03:06 AM

சிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பு மாணவர் விவரங்கள் ஆன்லைனில் பதிவு :

சென்னை

அடுத்த ஆண்டு பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட வசதியாக 9, 11-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை டிச.15முதல் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர்களுக்கு சிபிஎஸ்இ இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

9, 11-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்வதுமுக்கியமான பணி. இதன்மூலம் வரும் ஆண்டுகளில் நடத்தப்படும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முன்கூட்டியேதிட்டமிட உதவும். திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலும் பொதுத் தேர்வுக்கு முன்னரே மேற்கொள்ள முடியும். எனவே,9, 11-ம் வகுப்பு மாணவர் விவரங்களை சிபிஎஸ்இ இணையதளத்தில் டிச.15 முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x