Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான - சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

அறிவியல் பாடப்பிரிவுகளுக் கான (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம்போன்ற பாடங்கள்) சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 5, 6 ஆகிய தேதிகளில் கணினி வழியில் நடைபெற உள்ளது.

ஷிப்ட்-1 தேர்வு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும் ஷிப்ட்-2 தேர்வு பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறும். தேர்வு கொள்குறிவகை (அப்ஜெக்டிவ்) தேர்வாக இருக்கும்.

இதற்கான ஆன்லைன் பதிவுடிசம்பர் 3-ம் தேதி தொடங்கியுள்ளது. அறிவியல், கணிதம் தொடர்புடைய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் என்றஇணையதளத்தை பயன்படுத்திஜனவரி 2-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதிகள், வினாத்தாள் முறை, தேர்வுக்கட்டணம் உள்ளிட்டவிவரங்களை https://csirnet.nta.nic.in, www.nta.ac.in இணையதள முகவரிகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பு உரிய கல்வித்தகுதி இருப்பதை உறுதிசெய்துகொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x