Published : 04 Dec 2021 03:07 AM
Last Updated : 04 Dec 2021 03:07 AM

3-வது நாளாக : மருத்துவ மாணவர்கள் : ஆர்ப்பாட்டம் :

முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வை விரைந்து முடிக்க வலியுறுத்தி சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், மருத்துவ மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ம.பிரபு

சென்னை

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்தக்கோரி நாடு முழுவதும் முதல் மற்றும்2-ம் ஆண்டு முதுநிலை மருத்துவமாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சுமார் 2 ஆயிரம்மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் தொடங்கினர். முதல் நாளில்புறநோயாளிகள் பிரிவு பணிகளைபுறக்கணித்தும், 2-வது நாளில் புறநோயாளிகள் பிரிவு, வார்டுகளுக்கு செல்வதை தவிர்த்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3-வதுநாளான நேற்று புறநோயாளிகள் பிரிவு, வார்டுகள், அறுவை சிகிச்சைபணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x