Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM
தனிஷ்க் நிறுவனம் மங்கள சூத்திரங்களின் புனிதமான 7 உறுதிமொழிகள் பொறிக்கப்பட்டு தங்கம் மற்றும் வைரத்தால் அழகியலுடன் நுணுக்கமாக தயாரிக்கப்பட்ட மங்கள்சூத்ரா ‘டார்’ () என்றபெயரிலான நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருமணத்தின்போது உச்சரிக்கப்படும் முகூர்த்த மந்திரம் மிகஆழமாக வேரூன்றி இருக்கும் நமது பாரம்பரியத்தின் நுணுக்கமான பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.
இது ஆண்-பெண் இருவரையும் அன்பு மற்றும் நட்பின் நிரந்தர பந்தத்துடன் இணைக்கக் கூடியதாகும்.
மங்கள சூத்திரங்களின் புனிதமான 7 உறுதிமொழிகளின் முக்கிய அம்சத்தை தனிஷ்க் டார் நகைத்தொகுப்பின் வாயிலாக மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளது. இந்ததொகுப்பு 15 நுணுக்கமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது.
மணமக்களுக்கு தலைமுறை தலைமுறையாக 7 வாக்குறுதிகள் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன.
அவை, வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருப்பது, ஒருவருக்கு ஒருவர் ஊக்கம் அளித்துக்கொள்வது, வலிமையுடன் ஒன்றாக சேர்ந்து வளர்வது, செல்வத்தை பாதுகாப்பது, இன்பதுன்பங்களை பகிர்ந்து கொள்வது, குடும்பத்தை கவனித்துக்கொள்வது, எப்போதும் என்றென்றும் ஒன்றாக இணைந்திருப்பது ஆகியவை ஆகும்.
தனிஷ்க்கின் மங்கள்சூத்ரா டார் தொகுப்பில் இந்த 7 வாக்குறுதிகளும் கலை நயத்துடன்நுணுக்கமாக பொறிக்கப்பட்டுள்ளதால், இந்த உறுதிமொழிகளை உங்கள் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானதாக வைத்துக்கொள்ளலாம்.
சில டிசைன்களில் இந்த புனிதமான வாக்குறுதிகள் ஒற்றை சொல்லாக மொழிபெயர்க்கப்பட்டு ரோண்டல்களில் (rondels)மிக அழகாக எழுதப்பட்டுள்ளன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டார் தொகுப்பு அறிமுக விழாவில் டைட்டன் நிறுவன ஜுவல்லரி பிரிவு வடிவமைப்பு தலைவர் அபிஷேக் ரஸ்டோகி கூறும்போது, “மங்கள சூத்திரங்கள் நமது கலாச்சாரத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளன. பெண்கள் தங்களது சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்வதை மட்டுமல்லாமல் தனது ஆளுமை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் டிசைன்களை தேர்வு செய்ய விரும்புகின்றனர். இந்த வகை நகைகள் எளிதாக எப்போதும் அணியும் வகையிலும், செய்நேர்த்தி கொண்டதாகவும் உள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT