Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 426, பெண்கள் 294 என மொத்தம் 720 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
பிகாரில் இருந்து வந்த 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 115, கோவையில் 109பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 26,917-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 26 லட்சத்து 82,192 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 758 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 9 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம்தமிழகத்தில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை36,481- ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT