Published : 30 Nov 2021 03:07 AM
Last Updated : 30 Nov 2021 03:07 AM
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங் களில் நீர்நிலைகள் நிரம்பியதால் திறந்து விடப்பட்ட தண்ணீரும், நீர்நிலைகளின் கரைகள் உடைந்ததால் பெருக்கெடுத்த தண்ணீரும் பயிர்களை மூழ்கடித்துவிட்டன.
எனவே, காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு மீண்டும் ஆய்வும், கணக்கெடுப்பும் மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு ஏக்கரில் நெற்பயிர்களும், பிற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை தீர்மானித்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
அதேபோல, சேதமடைந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்தால் ஏக்கருக்கு ரூ.8,000, சம்பா பயிர்களை மறுநடவு செய்ய ரூ.2,415 மதிப்புள்ள விதை மற்றும் உரங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது போதுமானதல்ல.
நெல் சாகுபடிக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப இழப்பீடு உயர்த்தி வழங்கவேண்டும். எனவே, மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT